நோக்கு
இலக்குகள்
உழைக்கும் மாற்றுத்திறனாளிகள்- சுழற்சிமுறை மேம்பாட்டு திட்டம்
மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்களுக்கு அவர்களுடைய தொழிலை வளப்படுத்தும் நோக்கோடு கொடுக்கப்படும் கொடுப்பனவாகும். இக் கொடுப்பனவானது சுழற்சிமுறையில் மற்றைய மாற்றத்திறுனாளிகள் உள்வாங்குவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர் தமது தொழிலை வளப்படுத்த இரண்டு லட்சம் வரையிலான பணத்தினை கோர முடியும். அதனை அவர் மூன்று வருடங்களுக்குள் பொருந்தக் கூடிய வகையில் அந்தக் கடன் திட்டத்தினை மீள செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அவர் செலுத்தும் பணம் இன்னும் ஒரு மாற்றுத்திறனாளித் தொழில் முனைவோருக்கு கொடுக்கப்படும். அத்தோடு ஏற்கனவே கொடுப்பனவை பெற்றவர் மேலும் தனது தொழிலை விருத்தியாக்குவதற்கும் பணத்தினைக் கோர முடியும்.
தமிழ் மாற்றுத்திறனாளிகள் விழாவிற்காக பாடுபட்ட ,பங்களிப்புச் செய்த ,பங்கு கொண்ட மாற்றுத்திறனாளிகளில் தொழில் முயற்சியினை ஏற்கனவே ஆரம்பித்து தமது தொழில் ஆர்வத்தை நிரூபிக்க முனைந்தவர்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படுகின்றது.
இத் திட்டத்தில் உள்வாங்கப்படுவோர் தமக்குள்ளே ஒரு வலையமைப்பினை உருவாக்கி தமிழ் மாற்றுத்திறனாளிகள் வர்த்தக சம்மேளனம் போல் தொழில்படுவார்கள். அவர்களுக்கு கிரமமான முறையில் தேவையான தொழில் பயிற்சிப் பட்டறைகள் வர்த்தக முகாமைத்துவ கல்வி பட்டறைகள் போன்றன ஒழுங்கு செய்யப்படும். தொழில் சார்ந்தோர் தொழில் விற்பனர்கள் வங்கித் துறையைச் சார்ந்தவர்கள் இந்த பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு அவர்களுக்கு பொதுவான வர்த்தக சந்தையில் உள்ள வசதி முறைகள் குறித்து அறிவூட்டல்களைச் செய்வார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஒரு மாற்றுத்திறனாளி வர்த்தகர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும். அந்தப் பரிசினைப் பெறுவதற்கு ஒருவர் • தொடர்ந்து தமது மாதாந்த கொடுப்பனவினை கட்டிக் கொண்டுவருதல் வேண்டும். • தனது தொழிலை விருத்தியாக்குதல் வேண்டும். • அத்தோடு பிற மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிலை ஆரம்பிப்பதற்கு ஊக்குவித்தவராக இருக்க வேண்டும். • தொடர்ந்து தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவிற்காக பாடுபடுபவராக இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு மாற்றுத்திறனாளி தொழில் முனைவோரும் தாம் பெற்றுக் கொண்ட பணத்தின் மூலம் தமது வாழ்வை மேம்படுத்தி தாம் தனித்து நின்று வாழக் கூடியவர்களாக வளர வேண்டும் என்ற நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கு அவர் முழுமையான அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும். ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைப்பை அந்தத் தொழிலுக்கு வளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் எதிர்பாராத விதமாக அவரது கட்டுப்பாடுகளை மீறியளவில் ஏற்படுகின்ற காரணங்களினால் தொழில் பாதிப்படைந்தால் அவர் அதனை முறையாக DATA அமைப்பிற்குத் தெரியப்படுத்தி அந்த தோல்வியினின்று மீண்டும் எழுந்து செல்லக் கூடிய வகையில் தமக்கான மாற்றீடு என்ன என்பதனை தெளிவுபடுத்தி தொடர்ந்தும் DATA அமைப்போடு பயணிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
முதற்கட்டமாக எமது தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவில் ஏறத்தாழ இரண்டாயிரம் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டவர்கள் என்பதனை நாங்கள் கருத்தில் கொள்கின்றோம். அந்த இரண்டாயிரம் மாற்றுத்திறனாளிகளில் அனைத்து தொழில் முனைவோரும் உள்வாங்கப்பட்ட பின்னர் மற்றவர்கள் உள்வாங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இந்த திட்டத்தின் ஆரம்ப கொடையாளர்களாக 2018ம் ஆண்டு விளையாட்டு விழாவின் பிரதான அனுசரணையாளர்களாக இருந்த Abi Diamond Jewellers நிறுவனமும் Raj Cluster Ltd நிறுவனமும் அமைகிறார்கள். அவர்கள் அளிக்கின்ற முதற்கட்ட நன்கொடையில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. அத்தோடு இனிவரும் காலங்களில் இந்த திட்டத்தில் பலரை உள்வாங்கும் நோக்கோடு இந்த திட்டத்தில் பங்கெடுப்பவர்கள் அவர்களது வாழ்வில் ஏற்படுகின்ற முன்னேற்றங்கள் போன்றனவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு இவர்களைப் போல் இருக்கும் மற்றைய மாற்றுத்திறனாளிகளின் வாழ்விலும் ஒளியேற்றுவதற்காக இவர்களின் தகவல்கள் ஏனைய முதலீட்டாளர்கள் நன்கொடையாளர்களுக்கும் பகிரப்படும். அந்த அடிப்படையில் அனைவரும் இந்த திட்டத்திற்கு நிதியை அளிப்பதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்படும். இதற்காக பிரத்தியேகமான இணையத்தளம் உருவாக்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டு அதற்காக பிரத்தியேக கணக்கறிக்கைகள் தயாரிக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு மாற்றுத்திறனாளி முதலீட்டாளர்களும் தங்களது சாதனைகளைப் பகிரங்கமாக்கி தாங்கள் வெற்றியீட்டும் போது மேலும் நிதி வளங்களை திரட்டக் கூடிய நிலையிலும் ஒருவேளை தோல்வியடைந்தால் அதனின்றும் மீள்வதற்கான நிதி வளங்களைத் திரட்டுவதற்காக பாடுபட வேண்டும்.
இல்லை இது பகிரங்கமாக திரட்டப்படும் நிதியில் இருந்தே செய்கின்றதனால் பயன்பெறுபவர்களின் விபரங்கள் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவுமே இருக்கும்.
இத்திட்டத்தின் ஆரம்பத்தில் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக எமக்கு பங்களித்தவர்கள் எம்மோடு பயணிப்பவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள். அவர்கள் புதியவர்களை அறிமுகப்படுத்தலாம். அதேவேளை எமது தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகளின் 48 பங்காளர் அமைப்புக்களும் தங்களது உறுப்பினர்களை இந்த தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்தவர்கள் யாராயினும் தொழில் தற்போது செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அவர்களின் விபரங்களை எமக்குத் தரலாம். அவ்வாறானவர்களின் விபரங்களைப் பெற்று அவர்களோடு நாம் நேரடியாக தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதனை அவர்களின் தேவையின் அடிப்படையிலும் அவர்களது ஒவ்வொரு விண்ணப்பங்களும் சிறப்பியல்புகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு ஒழுங்கு நிலையில் கொண்டுவரப்பட்டும் அதன் பின்னர் அவர்களின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு, முதலிடுவதற்கு முன்வரும் நன்கொடையாளர்களுக்கு அந்தத் தகவல்கள் அளிக்கப்பட்டு அவர்களுக்கான கொடுப்பனவுகள் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
அவர்கள் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவில் பங்கெடுத்தவர்களாக இருத்தல் வேண்டும். • தமது தொழில் முயற்சிக்கான பூரண ஆர்வத்தோடு அத் தொழில் முயற்சியினை முன்னெடுப்பவர்களாக இருத்தல் வேண்டும். • இவர்களது குடும்பத்தின் நிலைமைகள் தங்கி வாழ்பவர்களின் நிலைமைகள் என்பன கருத்தில் எடுக்கப்பட்டு அவர்களுக்கான முன்னுரிமையளிக்கப்படும்.
இந்த தேர்வு பொறிமுறைகளை இலங்கை DATA நிர்வாகமும் இங்கிலாந்து DATA நிர்வாகமும் இணைந்தே மேற்கொள்கின்றது.